பேரிடர் மேலாண்மை
புதுச்சேரி மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல் திட்டம், 2023 – DDMA செயல் திட்டம் 2023
பேரிடர் மேலாண்மை குறித்த அறிமுகம்
பேரிடர் மேலாண்மை – நிறுவன அமைப்பு
புதுச்சேரியின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர்களுக்கு முந்தைய கட்டம் (அதாவது) தடுப்பு, தணிப்பு, தயார்நிலை, திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு, சமூக அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடருக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பேரிடர்களின் பாதிப்பு குறித்து நிர்வாகம் உணர்திறன் கொண்டுள்ளது மற்றும் பாதுகாப்பான மற்றும் பேரிடர் தாங்கக்கூடிய யூனியன் பிரதேசத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ஐ நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 01.08.2007 முதல் பின்வரும் அதிகார அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த அதிகார அமைப்புகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:-
புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் (PDMA)
புதுச்சேரி யூனியன் பிரதேசம், 01.08.2007 மற்றும் 19.06.2008 தேதியிட்ட அறிவிக்கைகளின்படி, முதலமைச்சரின் தலைமையிலான ‘புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை’ (Puducherry Disaster Management Authority – PDMA) அமைத்தது. முன்னதாக இருந்த ஆணையம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீண்டும் அமைப்பதற்கான முன்மொழிவு, அரசின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகக் குழு (SEC)
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-இன் பிரிவு 20, உட்பிரிவு (1)-இல் உள்ள விதிகளின்படி, மாநில நிர்வாகக் குழு (State Executive Committee) 01.08.2007 முதல் அமைக்கப்பட்டுள்ளது; அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
| வரிசை எண் | குழு உறுப்பினர் | பொறுப்பு |
|---|---|---|
| 1 | தலைமைச் செயலாளர் | தலைவர் |
| 2 | மேம்பாட்டு ஆணையர் | உறுப்பினர் |
| 3 | செயலாளர் (நிதி) | உறுப்பினர் |
| 4 | செயலாளர் (சுகாதாரம்) | உறுப்பினர் |
| 5 | செயலாளர் (உள்ளாட்சி நிர்வாகம்) | உறுப்பினர் |
| 6 | செயலாளர் (வருவாய்) | உறுப்பினர் |
| 7 | தலைமைப் பொறியாளர், பொதுப்பணித் துறை |
உறுப்பினர் |
| 8 | செயலாளர் / ஆணையர் (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) |
உறுப்பினர் செயலர் |
| 9 | கூடுதல் செயலாளர் (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) |
உறுப்பினர் |
தொடர்புடைய இணையதளங்கள்
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் https://ndma.gov.in/
- இந்திய வானிலை ஆய்வுத் துறை https://mausam.imd.gov.in/
- இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் https://incois.gov.in/
- மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை http://www.imdchennai.gov.in/