தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்

தொலைநோக்கு

• வருவாய்த்துறை தொடர்பான சட்டங்கள், நிர்வாக ஆணைகள் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களின் தொகுப்பை வழங்கி, பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரியப்படுத்துதல்.

• பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பொது சேவைகளைச் சாமானிய மக்கள் அணுகுவதற்கான ஒரு நுழைவாயிலாகச் செயல்படுதல்.

• வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குதல்.

 

குறிக்கோள்

• இணையதளங்கள் மற்றும் செயலிகள் (apps) வாயிலாக டிஜிட்டல் நிர்வாகத்தை மேற்கொண்டு, பொது சேவைகளை விரைவான பதிலளிப்புத் தன்மையுடனும், நியாயமாகவும், திறமையாகவும் அணுகுவதையும் வழங்குவதையும் உறுதி செய்தல்.

• நில ஆவணங்கள், சொத்துப் பதிவு, பல்வேறு சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் அனுமதிகளை வழங்குதல் போன்ற அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையுடன் உரிய நேரத்தில் பலன்களைப் பெறுவதை உறுதி செய்தல்.