ஏழை குடும்பங்களுக்கான இராஜிவ் காந்தி சமூக பாதுகாப்புத் திட்டம், 2012
புதுச்சேரி ஒன்றியத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களும் பயன் பெறும் வகையில் 18 முதல் 60 வயது வரை உள்ள குடும்ப நபர்கள் இயற்கை/விபத்தினால் மரணம் அடைந்தாலோ, விபத்தினால் நிரந்திர பகுதி/முழு ஊணம் அடைந்தாலோ, நிதி உதவி அளித்திடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் கடந்த 25-03-2011 முதல் நடைமுறையில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகள் மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்தும் இம்மாதிரியான திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்ப பதிவிறக்கம் – படிவம்-அ மற்றும் படிவம்-ஆ
பயனாளி:
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, இறந்த/ஊனமுற்ற நபர் 18 முதல் 60 வயது வரை உள்ள புதுச்சேரி ஒன்றியத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் (ஆண்டு வருமானம் ரூ.75,000/- க்கு மிகாமல்) வாழும் குடும்ப நபராக இருத்தல் வேண்டும்.
பயன்கள்:
இயற்கை மரணம் அடைந்தால் ரூ.30,000/-; விபத்தினால் மரணமடைந்தால் - ரூ.75,000/-; விபத்தினால் முழுமையான ஊனமடைந்தால் - ரூ.75,000/-; விபத்தினால் பகுதி ஊனமடைந்தால் - ரூ.37,500/-
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப படிவம் அனைத்து தாலுகா மற்றும் துணை தாலுகா அலுவலகங்கிலும் இலவசமாக கிடைக்கும். குடும்ப நபர், இயற்கை அல்லது விபத்தினால் மரணம் அடைந்தால் படிவம் – அ வில் பயனாளி விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப நபர் விபத்தினால் பகுதி / முழுமையான ஊனம் அடைந்தால் படிவம் – ஆ வில் பயனாளி விண்ணப்பிக்க வேண்டும். மரணம் / ஊனம் ஏற்பட்ட 180 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட தாலுகா / துணை தாலுகா அலுவலகங்களில் வட்டாட்சியர் / துணை வட்டாட்சியரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கீழ்கண்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் சம்பிக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப அட்டையின் ஒப்புகை பெறப்பட்ட நகல் (அல்லது) வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர் வழங்கிய வருமான சான்றிதழ் (ரூ.75,000/- மிகாமல்) அசல். அசல் இறப்பு சான்றிதழ். ஊனம் ஏற்பட்டால், உரிய அதிகாரம் பெற்ற அலுவலகத்தால் வழங்கப்பட்ட அசல் ஊனமுற்றோர் சான்றிதழ். ஒப்பம் பெறப்பட்ட. முதல் தகவல் அறிக்கை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் புலன் விசாரணை அறிக்கை (விபத்து / இயற்கை அல்லாத மரணம்) பயனாளியின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்தின் ஒப்புகை பெறப்பட்ட முதல் பக்க நகல்.