சுற்றுலா
1793 -இல் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சி பிறகு ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு மாறிய புதுச்சேரி பின்னர் 1814 -ஆம் ஆண்டு பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகதித்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் பிறபகுதிகளில் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனின் ஆதிக்கம் அதிகமாநாலும் புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் மட்டும் பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதித்தனர்.
1947-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா உத்வேகத்துடன் இந்தியா அரசும் மற்றும் பிரஞ்சு அரசும் சேர்ந்து 1948 -ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். அதில் குறிப்பிட்ட காலதிற்கு பிறகு இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்கலே தேர்ந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உடன்படிக்கையின் படி புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைத்த பகுதிகளை மாறியது. இது 1963 -ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் சந்திரநாகூர் பகுதி மேற்கு வங்க மாநிலத்தில் இணைக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் ஒருங்கிணைந்து நடுவண் அரசின் ஒன்றிய பகுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மாறியது.
புதுச்சேரி ஒன்றியப்பகுதி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. இதில் புதுச்சேரி, மஹே மற்றும் ஏனாம் பகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி மாவட்டம். இதில் வங்காள விரிகுடாவை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகள் உள்ளன. அரபிக் கடலைச் சார்ந்து மஹே பகுதி உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மிக வறண்ட வெப்பநிலை கால அளவுகளை கொண்ட ஆண்டு வெப்பநிலை 30சி மற்றும் 70-80% ஈரப்பதம் கொண்டதாகவும் வடகிழக்கு பருவகாலத்தில் அதிக மழை பெறக்கூடியதாகவும் அமைந்துள்ளது.