மூடு

மாவட்டம் பற்றி

புதுச்சேரி மாவட்டம்

முன்பு பிரெஞ்சு ஆட்சின் கீழ் இருந்த புதுச்சேரி பகுதி 294 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

அமைவிடம்

புதுச்சேரி மாவட்டம் , புதுவை, மாஹே, மற்றும் ஏனாம் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது. இது 12 சிறு பகுதிகளை கொண்டது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தென் இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரமாக அமைத்துள்ளது.

தட்பவெப்பம்

சராசரி ஆண்டு வெப்ப நிலை 30 C ஆகும். 70-85% ஈரப்பதம் நிலவும் பகுதி. மேலும் வடகிழக்கு பருவமழை பொழியும் பகுதியாகும்.

இடவமைப்பு

சமமான பகுதி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 15 மீ உயரத்தில் உள்ளது. மேலும் புதுச்சேரி பகுதி செஞ்சி ஆறு மற்றும் பெண்ணையாற்றின் இடையே அமைந்துள்ள கடைமடை பகுதியாகும். மற்றும் பல ஏரிகள் குளங்கள் நிறைந்த பகுதியாகும். புதுவையின் வடமேற்கு பகுதி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 30 மீ உயரத்தில் ஊள்ளது. இது ஒரு குன்றின் அமைப்பை தருகிறது.

மக்கள் தொகை

2011 மக்கள் தொகை கணக்கின் படி புதுச்சேரி மாவட்டத்தின் மக்கள் தொகை 9.50 லட்சமாகும். ஆணும் பெண்ணும் 50% என்ற விகிதத்தில் சமமாக உள்ளனர். மக்கள் தொகை கடந்த காலங்களில் இருந்ததைவிட மக்கள் தொகை ஏற்றம் கணிசமாக குறைந்துள்ளது (2.90%). பொதுவாக புதுச்சேரி மாநிலத்திருக்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து இடம்பெயர்பவர்கள் அதிகம். தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தின் உத்தேச மக்கள் தொகை 12 லட்சமாகும்.