மூடு

அடைவது எப்படி

இந்தியா நாட்டின் பிற பகுதிகளுடன் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மூலமாகவும் ரயில்வே மூலமாகவும் உள்நாட்டு விமான சேவை மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையத்தை விரைவில் அடையக்கூடிய தொலைவில் உள்ளது

விமான மார்க்கம்

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு தினசரி விமான சேவை உள்ளது.

ரயில் மார்க்கம்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், சென்னை மற்றும் திருப்பதி நகரங்களுக்கு தினசரி ரயில் சேவை உள்ளது. மேலும் இந்தியாவின் பிற நகரங்களான பெங்களூர், மும்பை , கொல்கத்தா, புவனேஸ்வர் , புது டெல்லி, மங்களூர் மற்றும் கன்னியாகுமரிக்கு ரயில் சேவை உள்ளது.

சாலை மார்க்கம்

புதுச்சேரி சிறந்த சாலை வசதிகள் கொண்டது. புதுச்சேரியில் இருந்து அண்டை நகரங்களுக்கு அநேகமாக அணைத்து நேரங்களிலும் பேருந்து வசதி உள்ளது. தினமும் சென்னை , பெங்களூர், ஐதராபாத் மற்றும் பல நகரங்களுக்கு சாதாரண பேருந்து முதல் உயர் சொகுசு பேருந்து வரை பலதரப்பட்ட பேருந்து வசதி உள்ளது. மேலும் புதுச்சேரியில் பிற நகரங்களுக்கு சென்றுவர வாடகை கார் வசதி உள்ளது.